எனக்கு காவி சாயம் பூசப்பார்க்கிறார்கள் என்று கண்ணீர் விடும் ரஜினிகாந்த், யாருமே எதிர்பாராத வகையில் ரங்கராஜ் பாண்டே நடத்தும் சாணக்கியா விழாவுக்கு போனதுடன் நில்லாமல் பேசவும் செய்திருக்கிறார்.
ரங்கராஜ் பாண்டே தந்தி டி.வி.யில் இருந்து நின்றதுமே, அவர் ரஜினி தொடங்க இருக்கும் தொலைக்காட்சியில் சேரப்போகிறார் என்று வதந்தி பரவியது. அதனை அப்போதே மறுத்தார் பாண்டே. அதாவது, அவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்பு வெளியே தெரியக்கூடாது என்பதற்காகத்தான் பின் வாசல் வழியே சாணக்கிய யுடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
இப்போது தமிழக மக்களுக்கு சோ போன்று ரங்கராஜ் பாண்டேவை காட்டும் முயற்சியில் வெளிப்படையாகவே இறங்கிவிட்டார் ரஜினி. ரஜினியை வைத்து கோடிகளில் படமெடுக்கும் தயாரிப்பாளர் நிகழ்ச்சிகளுக்குப் போகமாட்டார். அவரை பற்றி புகழ்ந்து எழுதும் பத்திரிகை, மீடியாக்களை கண்டுகொள்ள மாட்டார்.
அவருக்காக இரவும் பகலும் நேரத்தையும் பணத்தையும் கொடுத்து உழைக்கும் ரசிகர் வீட்டு நிகழ்ச்சியிலும் பங்கெடுக்க மாட்டார். ஆனால், சம்பந்தே இல்லாமல் ரங்கராஜ் பாண்டே நிகழ்ச்சிக்கு மட்டும் ஆஜராவார். அவரை சோ ரேஞ்சுக்கு புகழவும் செய்வார்.
தமிழகத்தின் அடுத்த சோவாக நீங்கள் வரவேண்டும் என்று ரஜினியே புகழ்ந்து பேசுகிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, குருமூர்த்தியைவிட ரங்கராஜ் பாண்டேதான் பெஸ்ட் என்று ரஜினி முடிவுக்கு வந்துவிட்டார்.
கட்சி ஆரம்பிக்காமல், தேர்தலில் நிற்காமல் ரஜினி ஜெயிக்கப்போகும் தேர்தலுக்கு ரங்கராஜ்தான் முதல்வராம். இப்பவே ஜே போட பழகிக்கோங்க ரசிகர்களே…
குருமூர்த்திக்கு நோ… ரங்கராஜ் பாண்டேக்கு யெஸ்..? டென்ஷனில் ரஜினி ரசிகர்கள்.
Advertisement