Home உலகம் தனிமையைக் கண்டு அச்சம் எதற்கு..? தற்கொலை எண்ணத்தை தள்ளிப் போடுங்க.

தனிமையைக் கண்டு அச்சம் எதற்கு..? தற்கொலை எண்ணத்தை தள்ளிப் போடுங்க.

539
0

கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக 15 நாட்கள் தனிமைப்படுத்தல் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தனிமை சமாளிக்க முடியாத அளவுக்குக் கொடுமை நிறைந்ததாக அச்சப்படுகின்றனர் மக்கள்.

கர்நாடகாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆனால், இந்த 3 பேருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

இவர்களின் மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஏனென்றால் தனிமை என்றாலே நோய் முற்றிவிட்டது என்ற தன்னம்பிக்கைக் குறைபாடு உண்டாகிறது. மற்றவர்களும் அச்சப்படுவதைக் கண்டு, இப்படியொரு முடிவுக்குப் போகிறார்கள்.

இந்த நிலையில், தனிமைப் படுத்தப்பட்டோருக்கு கவுன்சிலிங் உடனடி தேவை என்பது புரிகிறது. இதனை அரசு மட்டுமல்லாமல் சமூகநல அமைப்புகளும், தனிநபர்களும் கூட முன்னெடுக்கலாம். இதை செய்ய தவறினால் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படும்.

அதனால், குடும்பத்தில் யாரேனும் தனிமைப்படுத்தப்பட்டால், அவருடன் செல்போனில் அவ்வப்போது பலரும் பேசி ஆறுதல் சொல்ல ஏற்பாடு செய்யுங்கள். அப்போதுதான் தனிமை அவரை தொந்தரவு செய்யாது.

Advertisement