Home Uncategorized கேரளா நிலச்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

கேரளா நிலச்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

342
0

கேரள மாநிலத்தில் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணாறு அருகே அமைந்திருக்கும் ராஜமாலா பகுதியில் பெருக்கெடுத்த மழைநீரால் திடீரென்று அந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் கூலித் தொழில் செய்து வந்த மக்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 82 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி தவித்த மக்களை மீட்பதற்கு அம்மாநில தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 36 பேரை மீட்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை நிலச் சரிவில் இருந்து 12 பேர் உயிரோடு மீட்கப்பட்டு உள்ளனர். கொட்டும் கன மழையிலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement