Home சினிமா தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு 5 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..

தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு 5 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..

49110
0

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தியாகராஜ பாகவதர் ஆவார். இவரது நடிப்பில் வெளியான ஹரிதாஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிப்பால் பலரது மனதை சுண்டி இழுத்த இவரது மகள் வழி பேரன் சாய்ராம் தன்னுடைய குடும்பத்தினருடன் வறுமையால் வாடி வரும் சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விஷயம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து சாய்ராம் குடும்பத்தாருக்கு குறைந்த வாடகையில் அரசு சார்பாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், குடியிருக்க வீடு ஒன்றை ஒதுக்கி தருமாறு உத்தரவிட்டிருக்கிறார் அதோடு மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த உத்தரவை பலரும் வரவேற்றுள்ளனர்.

Advertisement