Home Uncategorized பிரபல நடிகரின் மனைவி கர்ப்பம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

பிரபல நடிகரின் மனைவி கர்ப்பம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

695
0

பிரபல நடிகர் நகுல் தனது மனைவி கர்ப்பமாக உள்ளதாக புகைப்படம் வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

கடந்த 2003ம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் நகுல். அதன் பிறகு இவர் காதலில் விழுந்தேன் மாசிலாமணி தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக இவர் நடித்துள்ளார். நடிகர் நகுல் நடிகை தேவயானியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நகுல் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு நடிகர் நகுலின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நடிகர் நகுல் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் நகுல் மற்றும் அவரது மனைவி ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement