Home Uncategorized பெண் குழந்தையைக் கையில் ஏந்தி புகைப்படம் வெளியிட்ட பாய்ஸ் பட நடிகர்! வைரல் புகைப்படம் உள்ளே!

பெண் குழந்தையைக் கையில் ஏந்தி புகைப்படம் வெளியிட்ட பாய்ஸ் பட நடிகர்! வைரல் புகைப்படம் உள்ளே!

352
0

பிரபல நடிகர் நகுல் தனது குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 2003ம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகிய பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் நகுல். அதன் பிறகு இவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக இவர் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் புதிதாக பிறந்த தன் மகளை கையில் ஏந்தி நடிகர் நகுல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் நடிகர் நகுலுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர்.

Advertisement