பிரபல நடிகர் ரமேஷ் திலக் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் இன்ப செய்தியை தனது ரசிகர்களுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து நடிகராக வலம் வருபவர் நடிகர் ரமேஷ் திலக் ஆவார். இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து சூதுகவ்வும் திரைப்படத்தில் இணைந்து நடித்ததன் மூலமாக பல ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டு பிரபலமான நடிகராக வலம் வர ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து தல அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் திரைப்படத்தில் நடிகர் ரமேஷ் திலக் நடித்திருந்தார். மேலும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் நடிகர் ரமேஷ் திலக் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரமேஷ் திலக், ஆர்ஜேவாக பணியாற்றி வரும் நவலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை ரமேஷ் திலக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு பகிர்ந்து இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “எனக்கு ஒரு தலைவன் பிறந்திருக்கிறான்” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துச் செய்திகளை கூறிய வண்ணம் உள்ளனர்.