Home சினிமா பிரபல நடிகரின் சேலஞ்சை ஏற்று புகைப்படம் வெளியிட்ட தளபதி விஜய்!

பிரபல நடிகரின் சேலஞ்சை ஏற்று புகைப்படம் வெளியிட்ட தளபதி விஜய்!

193
0

தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபு விடுத்த சேலஞ்சை ஏற்று நடிகர் விஜய் வெற்றிகரமாக அதனை நிறைவேற்றி ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபு தனது பிறந்தநாள் அன்று கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரக்கன்றுகளை நட்டு இருந்தார். அதைப் புகைப்படமாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தளபதி விஜய்க்கும் சேலஞ்ச் விடுத்திருந்தார். இதனையடுத்து மகேஷ்பாபு விடுத்த இந்த சேலஞ்சை தளபதி விஜய் ஏற்பாரா என்று பலரும் ஆர்வமாக காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதத்தில் நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் நடிகர் மகேஷ்பாபு விடுத்த சேலஞ்சை ஏற்று மரக்கன்றுகளை நடும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்த பதிவிற்கு கேப்ஷனாக, “மகேஷ் பாபு காரு, இது உங்களுக்காக. நன்றி.. பாதுகாப்பாக இருங்கள்.. “என்று கூறியிருக்கிறார். இதனைப் பார்த்த நடிகர் மகேஷ் பாபு, முயற்சியில் பங்கேற்றதற்கு நன்றி சகோதரா என்று பதிலளித்திருக்கிறார். வெகு நாட்களுக்குப் பின்னர் நடிகர் விஜயின் ட்வீட்டை பார்த்த அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. தற்போது நடிகர் விஜய் வெளியிட்டுள்ள இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement