Home சினிமா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகருக்கு 1 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகருக்கு 1 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!

454
0

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அதன் மூலமாக பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் தவசி ஆவார். அதிலும் குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு தந்தையாக நடித்தவர் தவசி ஆவார். அந்த திரைப்படத்தில் நடிகர் தவசியின் கதாபாத்திரம் மிகவும் பாராட்டத்தக்கது அமைந்தது.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் மற்றும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பான பிரபலமான சில சீரியல்களிலும் அவர் நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்றும் சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

அதாவது நடிகர் தவசி மற்றும் அவரது மகன் ஆகியோர் இணைந்து வீடியோ பதிவு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டனர். அதில் நடிகர் தவசி பார்ப்பதற்கே எலும்பும் தோலுமாய் மிகவும் மெலிந்த உடலுடன் காட்சியளித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும் அவர்கள் கூறினர். ஆகையால் தவசியின் புற்றுநோய் சிகிச்சைக்காக உதவி செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகர் தவசியின் இந்த கோரிக்கையை ஏற்று நடிகர்கள் பலரும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர் அந்தவகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் பழம்பெரும் நடிகர் விஜய்சேதுபதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அளித்துள்ளார். இதனை இயக்குனர் சௌந்தரராஜா, நடிகர் தவசியை நேரில் சந்தித்து நடிகர் விஜய்சேதுபதி சார்பாக வழங்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் சௌந்தர் ராஜாவும் ரூபாய் .10 ஆயிரத்தைத் அவருக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement