மானாட மயிலாட , ஜோடி நம்பர்-1 போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலமாக பிரபலமான நபராக வலம் வர ஆரம்பித்தார் ஸ்வேதா. அதுமட்டுமில்லாமல் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் வாயிலாக நடிகையாக வாய்ப்பும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பும் நடிகை ஸ்வேதா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் பிரஜன் நடிப்பில் வெளியாகும் சின்னத்தம்பி சீரியலிலும் நடிகை ஸ்வேதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்வேதா அருண் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்தாம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை நடிகை ஸ்வேதா தன் கணவரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன் ரசிகர்களிடம் இனிப்பான செய்தியை பகிர்ந்திருக்கிறார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அழகிய தம்பதியினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.