Home சினிமா வலிமை திரைப்படத்தின் அப்டேட் பற்றி ரசிகரிடம் அஜித் வெளியிட்ட ரகசியம்!

வலிமை திரைப்படத்தின் அப்டேட் பற்றி ரசிகரிடம் அஜித் வெளியிட்ட ரகசியம்!

762
0

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்தை இயக்குனர் H.வினோத் இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு போனி கபூர் தயாரிப்பாளர் ஆவார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே நடிகர் அஜித்தின் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்களை சமூக வலைதளப் பக்கத்தில் கேட்டுக் கொண்டு வருகின்றனர். எனினும் படக்குழுவினரிடம் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் நடிகர் அஜித்தை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் நடிகர் அஜித்தை வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து உள்ளார். அவரை சந்தித்த போது வலிமை திரைப்படத்தின் அப்டேட் பற்றி நடிகர் அஜித்திடமே அந்த ரசிகர் கேட்டுள்ளார். அதற்கு பிப்ரவரி மாத இறுதியில் கண்டிப்பாக வலிமை திரைப்படத்தின் அப்டேட் வரும் என்று அஜித் கூறியதாகவும் தன்னுடைய பதிவில் அந்த ரசிகர் வெளியிட்டுள்ளார்.

Advertisement