Home Uncategorized எச்1பி விசா விதிமுறையில் தளர்வுகள்- அமெரிக்கா அறிவிப்பு!

எச்1பி விசா விதிமுறையில் தளர்வுகள்- அமெரிக்கா அறிவிப்பு!

229
0

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் விளைவாக உலகம் முழுவதும் பல இக்கட்டான சூழ்நிலைகள் உருவாகின. இந்த சூழ்நிலைக்கு பல வளர்ந்த நாடுகளும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் வல்லரசு நாடான அமெரிக்கா எச்1பி விசாவிற்கு பல விதிமுறைகளை அறிவித்தது. கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி அன்று எச்1பி விசாவிற்கு இந்த ஆண்டு இறுதி வரை தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த விசாவிற்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஏற்கனவே அமெரிக்காவில் வேலை செய்து வந்தவர்கள் தற்போது எச்1பி விசாவின் மூலமாக மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஏற்கனவே தாங்கள் செய்துவந்த வேலையில் மீண்டும் தொடர்ந்து வேலை செய்ய நினைப்பவர்கள் தங்களுடைய மனைவி குழந்தை ஆகியோருடன் இணைந்து அமெரிக்காவிற்கு திரும்பலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement