Home உலகம் கொரோனாவால் அதிரும் அமெரிக்கா.. 3 லட்சத்தை கடந்த பலியானோரின் எண்ணிக்கை..1.61 கோடியை கடந்த பாதிப்பு..

கொரோனாவால் அதிரும் அமெரிக்கா.. 3 லட்சத்தை கடந்த பலியானோரின் எண்ணிக்கை..1.61 கோடியை கடந்த பாதிப்பு..

288
0

உலகை அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் தொற்று இருந்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் தொடர்ந்து இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் காணப்படுகிறது. இதுவரை இல்லாத அளவில் தினம்தோறும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் அந்நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.61 கோடியை கடந்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலையில் ஒரேநாளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை
3 லட்சத்தை கடந்து உள்ளது.

மேலும் ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக இந்த வைரஸ் தொற்றினால்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.61 கோடியை நெருங்க உள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement