Home அரசியல் நீடிக்கும் ஊரடங்கு..! நாடார்கள் என்ன செய்ய வேண்டும்? அண்ணாச்சி கரிக்கோல்ராஜ் கொடுக்கும் செம ஐடியா!

நீடிக்கும் ஊரடங்கு..! நாடார்கள் என்ன செய்ய வேண்டும்? அண்ணாச்சி கரிக்கோல்ராஜ் கொடுக்கும் செம ஐடியா!

ஊரடங்கு நேரத்தில் நாடார்கள் எப்படி தங்கள் வியாபாரத்தை தக்கவைத்துக் கொள்வது என்பது குறித்து அண்ணாச்சி கரிக்கோல்ராஜ் விடுத்துள்ள அறிக்கையை பார்க்கலாம்.

609
0

இது தொடர்பாக நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் அண்ணாச்சி கரிக்கோல் ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முழு ஊரடங்கு காரணமாக மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், நடமாடும் காய்கறி வாகனங்களுக்கு, மவுசு அதிகரித்துஉள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல், நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக, நான்கு நாள் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் இருப்பிடங்களிலேயே கிடைக்கும் வகையில், நடமாடும் காய்கறி மற்றும் பழ வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.இதனால், மக்கள் எந்தவித சிரமமும் இன்றி, அவரவர் வீட்டு வாசலிலேயே, தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்கின்றனர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு, மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளதால், நடமாடும் காய்கறி வாகனங்களுக்கு மவுசு அதிகரித்து உள்ளது.’இதே போல், மளிகை பொருட்களுக்கும் நடமாடும் வாகனங்கள் வீடு தேடி வந்தால், பயனுள்ளதாக இருக்கும்’ என, சென்னைவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நமது சமுதாய அண்ணாட்சி கடைகாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது பகுதிகளில் வியாபாரத்தினை அதிகரித்து தற்போதுள்ள கால மாற்றத்திற்கு ஏற்றவாறு தங்களது தொழிலை மேம்படுத்த கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement