Home இந்தியா கொரோனாவால் உயிரிழந்த லேப் டெக்னீசியனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்..

கொரோனாவால் உயிரிழந்த லேப் டெக்னீசியனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்..

529
0

மருத்துவமனையில் பணியாற்றிவந்த லேப் டெக்னீசியன் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூபாய் ஒரு கோடி நிவாரணமாக வழங்கியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் வைரஸ் தாக்குதல் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் கடந்த சில தினங்களாக இந்த வைரஸின் தாக்குதல் சற்று ஏற்றத்தை கண்டுள்ளது. கடந்த சில தினங்களாக தினம்தோறும் நான் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லியில் அமைந்திருக்கும் இந்து ராவ் மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் ஆக பணியாற்றி வந்தவர் ராகேஷ் ஜெயின் என்பவர் ஆவார்.

இவர் பணியில் இருக்கும் பொழுது இவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இதனையடுத்து அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் மேலும் அவரது குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரண நிதியையும் வழங்கியுள்ளார்.

Advertisement