Home சினிமா பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி

பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி

545
0

பிரபல நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நடிகர் செந்தில் பங்கேற்றிருக்கிறார்.பாஜக கட்சி உறுப்பினரான நடிகர் செந்தில் அதிமுக கூட்டணிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார். அவருக்கு கூரான அறிகுறிகள் தென்படவே பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார் பரிசோதனையின் முடிவில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இவரைத் தொடர்ந்து அவரது மனைவி, மகன், மருமகள் ஆகிய அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் செந்தில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement