Home உலகம் கொரோனா: அமெரிக்காவில் 4 தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளது – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

கொரோனா: அமெரிக்காவில் 4 தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளது – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

499
0

அமெரிக்காவில் நான்கு கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

கடந்த பல மாதங்களாக உலகம் முழுவதையும் கட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ் தொற்று. இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். உலகின் வல்லரசு நாடுகள் கூட இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தமுடியாமல் திணறி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.நிலையில் வருகிற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை சோதனை செய்து மக்களிடத்தில் வெளியிட வேண்டும் என்ற வேகத்துடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் நான்கு கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்டமான மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு முன்னேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement