Home உலகம் ரஷ்ய நாட்டில் 42 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. 11,198 பேருக்கு புதிதாக தொற்று...

ரஷ்ய நாட்டில் 42 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. 11,198 பேருக்கு புதிதாக தொற்று உறுதி..

858
0

ரஷ்ய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் தொற்று மாறி உள்ளது. இந்த வைரஸ் தொற்று உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் பரவி தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. அந்தவகையில் ரஷ்ய நாடும் இந்த வைரஸ் தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில் புதிதாக 11,198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்நாட்டில் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் 446 பேர் பரிதாபமாக இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளனர்.

Advertisement