Home இந்தியா இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக உயர்வு

இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக உயர்வு

396
0

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த பல மாதங்களாக உலகம் முழுவதையும் கட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ் தொற்று. இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். உலகின் வல்லரசு நாடுகள் கூட இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தமுடியாமல் திணறி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்துள்ளது

Advertisement