Home உலகம் இங்கிலாந்தை புரட்டி எடுக்கும் கொரோனா.. புதிதாக 40,261 பேருக்கு தோற்று உறுதி. கடந்த 24...

இங்கிலாந்தை புரட்டி எடுக்கும் கொரோனா.. புதிதாக 40,261 பேருக்கு தோற்று உறுதி. கடந்த 24 மணி நேரத்தில் 1,401 பேர் பலி..

326
0

உலகை அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோன வைரஸ் தொற்று இருந்து வருகிறது. வைரஸ் தொற்று நோயை எதிர்த்து பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. அதிலும் தற்போது உருமாறிய கொரோனோ வைரஸின் தாக்கம் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரன வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸின் புறவழி கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஏற்கனவே அந்நாட்டு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் பொருத்தவரையில் 40,261 புதிதாக இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,83,907 ஆக அதிகரித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஒரே நாளில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 1,401 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement