Home உலகம் அதிபரானால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரானோ தடுப்பூசி இலவசம் – ஜோ பிடன் அறிவிப்பு!

அதிபரானால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரானோ தடுப்பூசி இலவசம் – ஜோ பிடன் அறிவிப்பு!

532
0

நான் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அமெரிக்கர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார்.

வரும் நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு முன்னாள் துணை அதிபராக பதவி வகித்த ஜோ பிடன் போட்டியிடுகிறார். இதேபோல் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் என்பவர் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ள இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என உறுதி அளித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்துவேன் எனவும் அவர் அந்த பிரச்சாரத்தில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement