Home இந்தியா டெல்டா வைரஸை எதிர்த்து திறம்பட சிறப்பாக போராடுகிறது கோவேக்ஸின் தடுப்பூசி – அமெரிக்க சுகாதார நிறுவனம்...

டெல்டா வைரஸை எதிர்த்து திறம்பட சிறப்பாக போராடுகிறது கோவேக்ஸின் தடுப்பூசி – அமெரிக்க சுகாதார நிறுவனம் தகவல்

19735
0

உலகம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இதில் இருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி நாம் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வது மட்டும்தான். உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் பல வித தடுப்பூசி களுக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கி மக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி அமெரிக்க சுகாதார நிறுவனத்தால் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் கோவேக்ஸின் தடுப்பூசி ஆனது ஆல்ஃபா மற்றும் டெல்டா வைரஸ்களை எதிர்த்து திறம்பட செயல்படுகிறது என்று அமெரிக்க சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை எதிர்த்து சிறப்பாக செயல்படுகிறது. கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நபர்களின் இரத்த மாதிரியை சோதித்த பொழுது அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் தூண்டப்பட்டு ஆன்டிபாடி உருவாகிறது. குறைவான பக்க விளைவுகள் உடன் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை திறம்பட அளிக்கிறது என்று இந்த ஆய்வின் முடிவில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement