Home உலகம் இந்தியாவில் தொடர்ந்து உச்சம் பெற்று வரும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 1,45,384 பேருக்கு கொரோனா...

இந்தியாவில் தொடர்ந்து உச்சம் பெற்று வரும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

324
0

உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாகக் கொரோனா தொற்று இருந்து வருகிறது உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸின் பாதிப்பு தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருக்கிறது அந்த வகையில் இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்குதல் தொடர்ந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தற்போது தொற்றின் வேகம் முன்பைவிட அதிகரித்து காணப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் புதிதாக 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,05,926 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த வைரஸ் தொற்று பாதித்ததால் கடந்த 24 மணி நேரத்தில் 794 பேர் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement