Home உலகம் ரஷ்ய நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 9,163 பேருக்கு தொற்று உறுதி..

ரஷ்ய நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 9,163 பேருக்கு தொற்று உறுதி..

341
0

ரஷ்ய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51.26 லட்சத்தை கடந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் தொற்று மாறி உள்ளது. இந்த வைரஸ் தொற்று உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் பரவி தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. அந்தவகையில் ரஷ்ய நாடும் இந்த வைரஸ் தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 6-வது இடத்தில் இருக்கிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில் புதிதாக 9,163 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்நாட்டில் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 51,26,437 ஆகும். மேலும் 1,23,787 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரையில் 351 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

Advertisement