Home தமிழ்நாடு தமிழகத்தில் கணிசமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு… 4,506 பேருக்கு புதிதாக தொற்று...

தமிழகத்தில் கணிசமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு… 4,506 பேருக்கு புதிதாக தொற்று உறுதி

39200
0

உலகை அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் தொற்று இருந்து வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வைரஸின் பரவுதல் வேகம் கட்டுக்குள் வந்துள்ளது. ஒரே நாளில் 4,506 பேர் புதிதாக இந்த வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இன்று ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் இன்றைய தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டு குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 38,191 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement