Home சினிமா வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வந்த பிரபல நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் திரையுலகம்

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வந்த பிரபல நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் திரையுலகம்

807
0

தமிழ் சினிமாவில் வெளியான ரேணிகுண்டா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் தீப்பெட்டி கணேசன் ஆவார். இந்த திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நபராக வலம் வர ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்துடன் இணைந்து பில்லா-2 நடிகர் விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல திரைப்படங்களில் ஒரு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வந்தார். ஒரு காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வந்த அவருக்கு கவிஞர் சினேகன் நேரில் சென்று உதவிகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாரடைப்பு காரணமாக மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை நடிகர் தீப்பெட்டி கணேசனுக்காக தெரிவித்து வருகின்றனர்.

Advertisement