Home இந்தியா சைக்கிளில் ஃபுட் டெலிவரி செய்த ஸொமேட்டோ ஊழியர்.. தாராள மனதுடன் பைக் வாங்கிக் கொடுத்த வாடிக்கையாளர்.....

சைக்கிளில் ஃபுட் டெலிவரி செய்த ஸொமேட்டோ ஊழியர்.. தாராள மனதுடன் பைக் வாங்கிக் கொடுத்த வாடிக்கையாளர்.. என்ன ஒரு நெகழ்ச்சி சம்பவம்..!

407
0

ஹைதராபாத்தின் கிங் கோட்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் ராபின் முகேஷ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஸொமேட்டோ செயலி மூலமாக தனக்குத் தேவையான உணவை ஆர்டர் செய்திருக்கிறார். இந்த ஆர்டரை ஸொமேட்டோ நிறுவன ஊழியர் முகமது அகில் என்பவர் டெலிவரி செய்ய முற்பட்டு இருக்கிறார். ஆடர் பெற்றுக்கொள்வதற்காக தன் வீட்டு வாசல் வந்த முகேஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆடர் செய்த இருபதே நிமிடங்களில் அகில் தனக்கு உணவு பார்சலை வழங்கி இருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட அவர் திரும்பிப் பார்த்தபொழுது அவரிடம் சைக்கிள் மட்டுமே இருந்துள்ளது. வெறும் சைக்கிளில் 9 கிலோ மீட்டர் தூரத்தை இருபதே நிமிடங்களில் கடந்து அகில் வாடிக்கையாளருக்கு உணவு வழங்கிய சம்பவம் முகேஷை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முகேஷ் ஸொமேட்டோ நிறுவன ஊழியரான அகிலிடம் பேசத் துவங்கி இருக்கிறார். அப்போது பேசுகையில் அகில் பொறியியல் மாணவர் என்றும் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த வேலையை கடந்த ஒரு ஆண்டு காலமாக செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். குடும்ப கஷ்டம் காரணமாக தன்னிடம் பைக் வாங்க வசதி இல்லை என்றும் கூறியிருக்கிறார். இதனை அறிந்த முகேஷ் அகிலை குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அகிலுக்காக பைக் வாங்கி தர வேண்டும் என்று எண்ணி அவர் நிதி திரட்ட ஆரம்பித்திருக்கிறார். நிதி திரட்ட ஆரம்பித்த பத்து மணி நேரத்திலேயே 65 ஆயிரம் ரூபாயை அவர் திரட்டி இருக்கிறார். அகிலுக்காக நிதி திரட்ட ஆரம்பித்த நேரத்தை முடிக்கையில் அவர்களிடம் ரூ.73,000 கிடைத்துள்ளது.

இதனை வைத்து அகிலுக்காக ரூபாய் 65 ஆயிரம் மதிப்பில் டிவிஎஸ் எக்ஸ்எல் பைக்கை முகேஷ் வாங்கி கொடுத்திருக்கிறார். மீதமுள்ள பணத்தில் அவருக்கு ஹெல்மெட் , ரெயின்கோட் மற்றும் பொறியியல் படிப்பு செலவிற்கு உதவி செய்திருக்கிறார். உணவு டெலிவரி செய்யும் டெலிவரி பாய்க்காக முகேஷ் செய்த இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement