Home சினிமா பிரபல திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் காலமானார்..

பிரபல திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் காலமானார்..

799
0

சோகத்தில் மூழ்கிய திரையுலகம்தமிழ் சினிமாவில் வெளியான கோ, அயன், மாற்றான், அனேகன், காப்பான் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் கேவி ஆனந்த் ஆவார். இவருக்கு வயது 54. இவர் இயக்குனர் மட்டுமல்லாது ஒளிப்பதிவாளராகவும் தமிழ் சினிமாவின் பணியாற்றியிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் கடந்த 1195 ஆம் ஆண்டு இவர் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்ட திரைத்துறையினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சோகம் மறைவதற்கு முன்னரே மற்றும் ஒரு சோகம் திரைத்துறையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென திரைத்துறையினர் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Advertisement