Home உலகம் ஆஸ்திரேலியாவின் கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை...

ஆஸ்திரேலியாவின் கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு..

862
0

ஆஸ்திரேலியாவின் கடற்பரப்பிற்கு அருகே அமைந்திருக்கும் பசிபிக் பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அருகில் இருக்கும் மற்ற இடங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்கு ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் நியூசிலாந்து கடலோரப் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அடுத்து வரும் மூன்று மணி நேரத்தில் சுனாமி அலைகள் ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நேற்றையதினம் இந்தோனேசியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

Advertisement