Home அரசியல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நடப்பது நாங்கள்தான். கமல்ஹாசனுக்கு எடப்பாடியார் நோஸ்கட்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நடப்பது நாங்கள்தான். கமல்ஹாசனுக்கு எடப்பாடியார் நோஸ்கட்.

311
0

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரம், ஏ. வாணியம்பாடியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசனுக்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களின் வழியில் நடைபெறுகின்ற அரசு இது. அந்த இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசுகள் கிடையாது. நாம் தான் வாரிசு, மக்கள் தான் வாரிசு. அவ்வாறு எண்ணித்தான் நல்ல பல திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்குத் தந்தார்கள். 

ஒரு தாய், தன் குழந்தையின் முகக் குறிப்பறிந்து செயல்படுவதைப் போல, இருபெரும் தலைவர்களும் இந்நாட்டு மக்களை குழந்தைகளாக எண்ணி, அவர்களின் குறிப்பறிந்து, நலத்திட்ட திட்டங்களை எப்பொழுது செயல்படுத்த வேண்டுமென்று எண்ணி, அவற்றை செயல்படுத்தியும் காட்டினார்கள். 

அவர்கள் செயல்படுத்திய அத்தனை திட்டங்களும் உயிரோட்டமுள்ள திட்டங்கள். வேறு எந்தத் தலைவர்கள் வந்தாலும் அந்தத் திட்டங்களை நிறுத்த முடியாது. சரித்திர சாதனை படைத்த சத்துணவுத் திட்டத்தை தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கடைபிடித்தார்கள். இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆலயங்களில் அன்னதானத் திட்டம் கொண்டு வந்து உணவு கொடுத்தார்கள். பெண்களுக்கான திட்டங்களை குறிப்பறிந்து செயல்படுத்தினார்கள்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்கள். அம்மா வழியில் நடைபெறும் அரசும் அம்மாவின் வழியை கடைபிடித்து வருகிறது என்று தெரிவித்தார். இந்த அரசு மட்டுமல்ல, ஒவ்வொரு அ.தி.மு.க.வினரும் எம்.ஜி.ஆர். வாரிசு என்று எடப்பாடியார் சொன்னதற்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement