Home அரசியல் காமராஜரை அவமதித்தார் கருணாநிதி… கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முதல்வர் பழனிசாமி.

காமராஜரை அவமதித்தார் கருணாநிதி… கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முதல்வர் பழனிசாமி.

14294
0

வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், சேலம் எடப்பாடி தொகுதியில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடைசிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

உங்கள் வீட்டில் ஒருவனாக இருந்து உங்களை சந்திக்கிறேன். நான் மீண்டும் முதலமைச்சராக, இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த வெற்றி அமைய வேண்டும். தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி எடப்பாடி என்று அமையும் வகையில் வாக்களியுங்கள் இதுவரை எந்த முதலமைச்சரும் அவரது சொந்த தொகுதிக்கு இத்தனை முறை சென்றிருக்கமாட்டார்கள்.

மு.க.ஸ்டாலினை போல் மற்றவர்கள் பேச்சை கேட்பதில்லை.எனது சொந்த யோசனையில் செயல்பட்டு வருகிறேன். இந்த தேர்தலே திமுக விற்கு இறுதி தேர்லாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி இறந்தபோது, எம்.ஜி.ஆர் சமாதி அருகே இடம் கொடுக்க மறுத்தவர் கருணாநிதி. முதலமைச்சராக இருந்து, நாட்டுக்காக உழைத்த காமராஜர் இறந்த போது, இடம் கொடுக்க முடியாது என மறைந்த முதலமைச்சர் கருணாநிதி சொன்னார்.

அதே பானியில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க முடியாது என்று சொன்னோம். முன்னாள் முதலமைச்சர் இறந்தால் மெரினாவிடம் இடம் இல்லை என கருணாநிதி தான் எழுதி வைத்துவிட்டார். முதல்வர் கருணாநிதிக்கு 46,000 சதுர அடி இடம் ஒதுக்கினேன். ஆனால் ஆறு அடி இடம் கொடுக்க மறுத்துவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்.

இது சட்டத்தின் ஆட்சி. மு.க.ஸ்டாலினின் நடிப்பை இனியும் மக்கள் நம்பமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூட்டத்திற்கு மத்தியில் இருந்து ஒரு நபர், நான் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஆதரவு தருகிறேன் என்று குரல் ஒலிப்பதைக் கவனித்த எடப்பாடி பழனிசாமி அனைவரிடமும் அதைக்கூறி நன்றி தெரிவித்தார்.

காமராஜரை அவமதித்த கருணாநிதி என்ற விவகாரம் இன்று தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Advertisement