Home சினிமா இணையத்தில் வைரலாகும் கர்ணன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இணையத்தில் வைரலாகும் கர்ணன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

348
0

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கர்ணன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். பிரபல இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்ட நிலையில் இந்த திரைப் படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் பற்றிய முக்கிய அறிவிப்பு தற்போது படக்குழுவினர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்ணன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் அந்த போஸ்டரில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. கர்ணன் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக கூறப்பட்டுள்ளது.

Advertisement