Home ஆன்மிகம் குழந்தை வரம் உள்ளிட்ட பல பலன்களை அள்ளித்தரும் சஷ்டி விரத சிறப்பு

குழந்தை வரம் உள்ளிட்ட பல பலன்களை அள்ளித்தரும் சஷ்டி விரத சிறப்பு

793
0

முருகனுக்கு முக்கிய விரத நாளாக பார்க்கப்படும் சஷ்டி விரதம் இருப்பது எப்படி, சஷ்டி விரதம் இருந்தால் என்ன பலன் என்பது குறித்து பார்ப்போம்.

கார்த்திகை மாதம் வளர்ப்பிறையில் வரக்கூடிய சஷ்டி மகா சஷ்டி என அழைக்கப்படுகிறது. அந்த நாளை சேர்த்து மொத்தம் 6 நாட்கள் விரதம் இருப்பதும் சூரசம்ஹாரப் பெருவிழாவுடன் இந்த விரதம் நிறைவடையும். இந்த சஷ்டி விரதம் சிறப்பாக நடக்கும் திருச்செந்தூர் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் 2வது படை வீடாகும். குழந்தை வரம் வேண்டி முருகனை நினைத்து விரதமிருக்க அவரே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம்.  ஒவ்வொரு மாதமும் வளர் பிறை தேய்பிறைகளில் சஷ்டி திதி வருவது வழக்கம். அப்படி கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி மகா சஷ்டி என அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் திருச்செந்தூர் கோயிலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கம்.

குழந்தை வரம் பெற விரும்புபவர்கள் சஷ்டி தினங்களில் விரதமிருக்கலாம். ஆனால் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை மகா சஷ்டியில் 6 நாள் விரதம் கடைப்பிடிப்பது மிக விசேஷமானது. அப்போது குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் இருவரும் சேர்ந்து விரதம் இருப்பது நல்லது. கோயிலிலோ அல்லது வீட்டிலிருந்து கூட விரதம் இருக்கலாம். குழந்தை வேண்டும் தம்பதியர், வேலையில் இருந்தாலும், நாம் அலுவலகத்தில் கூட விரதம் இருக்கலாம். காலையில் எழுந்து குளித்து முருகனுக்கு பூஜை செய்து உங்களின் விரதத்தை தொடங்கலாம். கந்த சஷ்டி விரதம் ஏற்கும் பக்தர்கள் பல வகைகளில் விரதம் இருப்பதுண்டு. சிலர் வெறும் தண்ணீர் மட்டும் குடித்தும், சிலர் பால் பழம் மட்டும் எடுத்துக் கொள்ளும் முறைகள் உண்டு. சூர சம்ஹார நிகழ்வு முடியும் வரை விரதம் இருப்பதும், பின்னர் சுவாமி தரிசனம் செய்து விரதத்தை முடிக்கலாம்.

பக்தர்கள் விரதத்தின் போது முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது. கந்த சஷ்டி கவசம் படித்தல், திருப்புகழ் உள்ளிட்டவை படித்து முருகனின் அருளைப் பெறலாம்.

திருச்செந்துாரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். ஆனாலும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

Advertisement