Home Uncategorized கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்துவிடுமா…? அரசு சொல்வதற்கு காரணம் என்ன..?

கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்துவிடுமா…? அரசு சொல்வதற்கு காரணம் என்ன..?

354
0

வழிபாட்டு தலங்களை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று உயர் நிதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருக்கும் பதில் வேதனை அளிப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையிலும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்ட பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோவில், மசூதி மற்றும் தேவாலயங்களை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், மத வழிபாட்டுத் தலங்களை திறந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தெரிவித்தார். மேலும், தற்போது மத வழிப்பாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு அளிக்க போதுமான காவலர்கள் இல்லை என்றும் மத வழிபாட்டு தலங்களை திறக்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது.

கண்ணுக்கு தெரியாத கொரோனா எனும் கொடிய அரக்கனுடன் நாம் அனைவரும் போரிட்டு வருகிறோம். 53 நாட்களாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பதால், ஒரு வித மன அழுத்தத்தில் உள்ளனர். மக்களிடம் தங்களின் மன குமுறலை ஆட்சியாளர்களிடம் கூறி எந்த பயனை ஏற்படவில்லை என்பதால், அடுத்து இறைவனிடம் மட்டுமே சென்று முறையிட முடியும். ஆனால் இதற்கும் ஆட்சியாளர்கள் தடையாக இருப்பது தான் கவலை அளிக்க கூடிய செய்தியாகும்.

டாஸ்மாக் கடையை திறந்து கலர் கலர் டோக்கன் வழங்கி குடிமகன்களுக்கு பாதுகாப்பு முடியும் அரசால், வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்புக்கு காவலர்களை திறந்த முடியாது என்றும், வழிபாட்டு தலங்களை திறந்தால் சட்டம் ஒழங்கு பிரச்னை ஏற்படும் என அரசு கூறியிருப்பது வேதனை அளிப்பதாக இருந்தாலும், தகுதியற்ற ஆட்சியாளர்கள் என்பதற்கு சான்றாக அமைந்து உள்ளது.

பாவ மூட்டைகளை சுமப்பதை விட்டு விட்டு இனி வரும் காலங்களிலாவது புண்ணியத்தை தேடக்கூடிய நற்காரியங்கள் செய்ய இந்த ஆட்சியாளர்களுக்கு அறிவை வழங்க வேண்டுமென இறைவனிடம் பிராத்தனை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisement