Home அரசியல் ஜெ.அன்பழகன் மறைவு – மருத்துவமனை அறிக்கை!

ஜெ.அன்பழகன் மறைவு – மருத்துவமனை அறிக்கை!

601
0

தி.மு.க.வைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் மறைவு குறித்து அவர் சிகிச்சைபெற்றுவந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விவரக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

……………. அதன் விவரம்: …………” கோவிட் -19 நச்சுக் காய்ச்சலால் ஜெ. அன்பழகன், தீவிர பாதிப்புக்கு உள்ளாகி, உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்துவந்தார். இன்று காலை அவருடைய உடல்நிலையானது மிகவேகமாக சீர்கெடத் தொடங்கியது. செயற்கைச் சுவாசம் உள்பட்ட அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட்டன. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இன்று காலை 8.05 மணிக்கு அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. அவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். ” என்று சிகிச்சையளித்த ரேலா மருத்துவமனையின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement