Home Uncategorized நாம் எதிர்க் கட்சிகள் தான்! எதிரிகள் அல்ல! பதிவை வெளியிட்ட ஜோ பிடன்!

நாம் எதிர்க் கட்சிகள் தான்! எதிரிகள் அல்ல! பதிவை வெளியிட்ட ஜோ பிடன்!

779
0

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை நோக்கி பயணித்து வரும் ஜோ பிடன் அவர்கள் நாம் எதிர் கட்சிகளாக இருந்தாலும் எதிரிகள் கிடையாது என்று ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தற்போது அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பிடன் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அதேசமயம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி நீதிமன்றம் செல்வேன் என கூறிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நாம் எதிர்க் கட்சியாக இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது. நாம் அமெரிக்கர்கள். நம்முடைய அரசியலின் நோக்கம் முற்றிலும் இடைவிடாத போர் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் எனவும் அந்த பதிவில் ஜோ பிடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement