Home இந்தியா மகாராஷ்டிரா: ஒரே நாளில் 2,736 பேருக்கு புதிதாக தொற்று உறுதி.. இதுவரை 46 லட்சத்தை...

மகாராஷ்டிரா: ஒரே நாளில் 2,736 பேருக்கு புதிதாக தொற்று உறுதி.. இதுவரை 46 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

851
0

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் கொரோனாவால் 2,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பல மாதங்களாக உலகம் முழுவதையும் கட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ் தொற்று. இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். உலகின் வல்லரசு நாடுகள் கூட இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தமுடியாமல் திணறி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்தியாவிலும் தொடர்ந்து இந்த வைரசின் தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,736 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் வைரஸ் தாக்குதலுக்கு 46 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அம்மாநிலத்தில் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51,215 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement