Home சினிமா சூப்பர்ஸ்டாருக்கு மருத்துவ பரிசோதனை நல்லபடியாக நடந்தது.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

சூப்பர்ஸ்டாருக்கு மருத்துவ பரிசோதனை நல்லபடியாக நடந்தது.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

10032
0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றுள்ள அவர் அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்திருக்கிறார். அவருடைய மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் நல்ல முறையில் நடந்து முடிந்ததாக அவர் கவிஞர் வைரமுத்து இடம் பகிர்ந்திருக்கிறார்.

இதனை வைரமுத்து அவருடைய சமூகவலைதள பக்கத்தின் மூலமாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். வைரமுத்துவின் பதிவைப் பார்த்த ரஜினியின் ரசிகர்கள் பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் மேலும் தங்களுடைய தலைவர் நல்ல உடல்நலம் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் எனவும் வாழ்த்தி வருகின்றனர்.

Advertisement