Home அரசியல் வீட்டிலேயே இயற்கை உரம்… அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு.

வீட்டிலேயே இயற்கை உரம்… அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு.

439
0

கொரோனா காலத்தை முன்னிட்டு மீண்டும் இயற்கை உணவுக்கும், இயற்கை வாழ்வுகும் மக்கள் திரும்பிவருகின்றனர். இந்த நிலையில் இயற்கை உணவு பெற வேண்டும் என்றால், இயற்கை உரம் அவசியம். அதற்கான முன்னெடுப்பில் ஈடுபடும் நிறுவனத்தாருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் ட்வீட்டில், ‘கோவை மாவட்டம் வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சி சார்பில், இயற்கை உரம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், வீட்டுக்காய்கறி தோட்டம், பூச்செடி வளர்ப்போருக்கு வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்க கற்றுக்கொடுக்கப்படுகிறது.

மண்ணின் தன்மை மாறாமல், அனைத்து வகை பயிர்கள் மற்றும் பூச்செடிகளுக்கும் பயன்படும் வகையில் வீடுகளிலேயே இயற்கை உரம் தயாரித்தல் குறித்து பொதுமக்களை பயிற்றுவிக்கும் வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு எனது பாராட்டுகள்’ என தெரிவித்துள்ளார்.

Advertisement