Home சினிமா என்னுடைய 3 திரைப்படங்களும் OTT தளத்தில் விரைவில் வெளியாகும்! பிரபல தயாரிப்பாளர் அறிவிப்பு!

என்னுடைய 3 திரைப்படங்களும் OTT தளத்தில் விரைவில் வெளியாகும்! பிரபல தயாரிப்பாளர் அறிவிப்பு!

572
0

பிரபல தயாரிப்பாளர் தான் தயாரித்து வரும் மூன்று திரைப்படங்களை OTT தளத்தில் வெளியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதன் கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் வருகிற 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவராமல் முடங்கி உள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா கதாநாயகியாக நடித்த பொன்மகள்வந்தாள் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் பெண்கியூன் என்ற திரைப்படம் அடுத்த வாரம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வா டீல் , அண்டாவக் காணோம் , மம்மி சேவ் மீ ஆகிய தனது திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Advertisement