Home அரசியல் அச்சச்சோ, அடுத்த மாதங்களில்தான் கொரோனாவின் உச்சகட்ட ஆட்டம் இருக்கிறதா..? எய்ம்ஸ் எச்சரிக்கை

அச்சச்சோ, அடுத்த மாதங்களில்தான் கொரோனாவின் உச்சகட்ட ஆட்டம் இருக்கிறதா..? எய்ம்ஸ் எச்சரிக்கை

423
0

மே மாதத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு வந்தது நிஜமாகியுள்ளது. இந்த நேரத்தில் லாக் டவுனை தளர்த்தியுள்ளது மத்திய மற்றும் மாநில அரசுகள்.


இது தவறான நடவடிக்கை வரும் ஜூன், ஜூலை மாதங்களில்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிர்ச்சிகரமான கருத்து தெரிவித்துள்ளது.


இது உறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலோரியா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இப்போது தினம் தினம் அதிகரித்துவரும் கொரொனா புள்ளிவிபரங்களை பார்க்கும்போது, ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடக்கூடும். ஆனால், அதைத் தவிர்க்க பல்வேறு மாற்று வழிகள் உள்ளன. ஊரடங்கை எவ்வளவு நீட்டிக்க முடியுமோ அவ்வளவு நல்லது.


இந்தியாவில் கொரோனா பரவல் எவ்வளவு காலம் இருக்கும் என்று கணிப்பது கடினம். ஆனால், ஒரு நோய் அதன் உச்சத்தை அடைந்தவுடன், கீழே வரும் என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியும். கொரோனா பரவல் ஜூன் மாதத்தில் உச்சம் பெறும். பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கலாம் என்று குறிப்பிட்டார்.


இன்னும் இரண்டு மாதங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதுதான்.

Advertisement