Home சினிமா திரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகை நதியா!

திரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகை நதியா!

1234
0

மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரிஷ்யம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ரீ மேக்கில் பிரபல நடிகை நதியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் நடிகை மீனா போன்ற பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் திரிஷ்யம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. முதல் பாகத்தைப் போலவே இந்த திரைப்படத்திலும் யூகிக்க முடியாத திரைக்கதையுடன் கூடிய சுவாரசியமான காட்சிகளால் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதன்காரணமாக திரிஷ்யம் திரைப்படத்தின் முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த படக்குழுவினர் இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ் , மீனா போன்ற பலரும் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை நதியாவின் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி மலையாளத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஆஷா சரத் கதாபாத்திரத்தில் நடிகை நதியா தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement