Home இந்தியா பிப்ரவரி 1 முதல் தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்- ஆந்திர அரசு அதிரடி..

பிப்ரவரி 1 முதல் தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்- ஆந்திர அரசு அதிரடி..

391
0

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சீனாவில் பரவ ஆரம்பித்த வைரஸ் தொற்று உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் விளைவாக இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது இந்த வைரஸின் தாக்கம் குறைந்து வரும் சூழ்நிலையில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆந்திராவில் ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படும் தொடக்கப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisement