Home இந்தியா ஏழைகளுக்கு உடனடித் தேவை பணம் மட்டும்தான்… மோடிக்கு ராகுல் காந்தி சுளீர்.

ஏழைகளுக்கு உடனடித் தேவை பணம் மட்டும்தான்… மோடிக்கு ராகுல் காந்தி சுளீர்.

245
0

20 லட்சம் கோடியில் ஏழைகளுக்கு ஏதேனும் பலன் கிடைக்குமா என்று தினம் தினம் நிர்மலா சீதாராமன் பேசுவதைக் கேட்டு மக்கள் ஏமாந்து போகிறார்கள். ஏழை மக்களின் இன்றைய தேவை பணம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

இன்று ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் காணொலி காட்சியின் மூலம் உரையாடிய நேரத்தில், ‘ஏழை மக்கள் தற்போதிருக்கும் சூழ்நிலையில் நிதியுதவியைத் தான் எதிர்பார்க்கிறார்கள். கடனை அல்ல. எனவே, பிரதமர் நரேந்திர மோடியை நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தயவு கூர்ந்து சிறப்புத் திட்டத்தை மாற்றியமையுங்கள். ஏழை மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடியாக பண உதவி வழங்க வேண்டும். அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துங்கள்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அவர், ‘புலம்பெயர் தொழிலாளர்களின் தற்போதைய நிலை இதயத்தை நொறுங்க வைப்பதாக உள்ளது. விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துங்கள். அவர்கள்தான் நமது நாட்டின் எதிர்காலம். அவர்களுக்கு உதவ வேண்டும்‘ என்று கோரிக்கை வைத்திருக்கிறார் ராகுல்.
இதை மோடி கேட்பாரா என்ன..?

Advertisement