Home தமிழ்நாடு தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வரும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு...

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வரும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..

39301
0

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உண்டு என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளது.

Advertisement