Home இந்தியா விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றி வரும் சீனாவின் ராக்கெட் இன்று பூமியில் விழபோவதாக அதிர்ச்சித் தகவல்..

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றி வரும் சீனாவின் ராக்கெட் இன்று பூமியில் விழபோவதாக அதிர்ச்சித் தகவல்..

268
0

சீன நாடு விண்வெளியில் தனக்கென்று தனியாக விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது. இந்த விண்வெளி நிலையத்திற்கு தியான் காங் என்று சீன அரசு பெயரிட்டுள்ளது. இந்நிலையில் இந்த விண்வெளி தளத்திற்கு சீனா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று லாங் மார்ச் 5b என்ற விண்கலத்தை செலுத்தியது.இது தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து தற்போது பூமிக்கு திரும்பிய வண்ணம் உள்ளது.

கட்டுப்பாட்டை இழந்து மீண்டும் திரும்பி பூமிக்கு வரும் இந்த ராக்கெட் பூமியில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பலரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள தகவலில் இந்த ராக்கெட் வளி மண்டலத்திற்குள் நுழையும் முன் அதனுடைய பல பாகங்கள் எரிந்து விடும் என்பதால் அது பூமிக்கு எந்த ஒரு சேதத்தையும் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறது.

Advertisement