Home அரசியல் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஸ்டாலின் அழைப்பு..! இப்போது என்ன விவகாரமாம்?

மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஸ்டாலின் அழைப்பு..! இப்போது என்ன விவகாரமாம்?

348
0

அவ்வப்போது கூட்டணிக் கட்சிகளை அழைத்து ஆலோசனைகளை நடத்திவருகிறார் ஸ்டாலின். அரசுக்கு எதிராக அவ்வப்போது ஏதாவது போராட்டம் நடத்துவதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்படும்.

அதன்படி, வரும் 27ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். என்ன காரணத்துக்காக இந்த கூட்டம் நடத்தப்படும் என்று விசாரித்ததில், கந்தசஷ்டி கவச விவகாரத்தில் இருந்து தி.மு.க.வை காப்பாற்றும் வகையில் 444 பேர் மரண விவகாரத்தை பெரிதாக்க ஸ்டாலின் முயற்சிப்பதாகத் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் கொரோனாவில் விடுபட்ட 444 மரணங்களை, பலியானவர்களின் பட்டியலில் தமிழக அரசு அண்மையில் சேர்த்தது. இந்த மரணங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கவேண்டும் என்பது தொடங்கி பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறாராம்.

இந்த மரணங்களாவத் தி.மு.க.வுக்கு கை கொடுக்குமா? பிண அரசியல் செய்கிறார் என்று விமர்சனம் பெற்றுத் தருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement