Home சினிமா தடையில்லா சான்றிதழை பெற்றது சூரரைப்போற்று திரைப்படம்.. மகிழ்ச்சியில் சூர்யாவின் ரசிகர்கள்..!

தடையில்லா சான்றிதழை பெற்றது சூரரைப்போற்று திரைப்படம்.. மகிழ்ச்சியில் சூர்யாவின் ரசிகர்கள்..!

362
0

ரபல நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக முன்பே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அந்த திரைப்படத்திற்கு விமானப்படையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சூர்யா கதாநாயகனாக நடிக்கும் சூரரைப்போற்று திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு கதாநாயகியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் மோகன்பாபு, கருணாஸ் போன்ற பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் 30ஆம் தேதி அன்று ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் சூர்யா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், சூரரைப்போற்று திரைப்படத்திற்கு விமானப் படையினரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அந்த சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால் திட்டமிட்டபடி சூரரைப்போற்று திரைப்படம் வரும் 30-ஆம் தேதி திரையிடப்படாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய அறிவிப்பை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. அதாவது சூரரைப்போற்று திரைப்படத்திற்கு விமானப்படை தரப்பிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்துவிட்டதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் பதிவிட்டிருக்கிறார். மேலும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த செய்தியின் சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement