தாய்லாந்து கொரோனா மருந்துகளை தற்போது குரங்குகளிடம் பரிசோதனை செய்து வருகிறது.
சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் அதன் கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 54 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலக அளவில் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களது நாட்டு மக்களை காப்பாற்ற பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தாய்லாந்து கொரோனாவுக்கான மருந்தை எலிகளிடம் சோதனை செய்து அதில் வெற்றியும் கண்டது. எனவே தற்போது அந்த நாடு கொரோனா மருந்துகளை குரங்குகளிடம் பரிசோதித்து வருகிறது.
அடுத்த வருடம் மருந்திற்கான முழு பரிசோதனையும் முடிந்துவிடும் என்று தாய்லாந்து அரசு கூறியுள்ளது.