Home அரசியல் காமராஜரும், எம்.ஜி.ஆரும் செயல்படவே இல்லையா..? உதயநிதி மீது பாயும் மூத்த தலைமுறை

காமராஜரும், எம்.ஜி.ஆரும் செயல்படவே இல்லையா..? உதயநிதி மீது பாயும் மூத்த தலைமுறை

242
0

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜரும், புரட்சித்தலைவர் எம்ஜி.ஆரும் செயல்படவே இல்லை என்ற தொணியில் பேசிய விவகாரம் மூத்த தலைமுறையினரை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

எல்லோருமே காமராஜர் ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி என்று சொல்கிறார்களே தவிர, ஏன் கருணாநிதி ஆட்சி அமைப்போம் என்று சொல்வதில்லை என்று கேள்வி எழுப்பினார்கள்.

இந்த கேள்விக்குப் பதில் எழுப்பிய உதயநிதி, ‘கருணாநிதி ஆட்சி என்றால் செயல்பட வேண்டுமே…’ என்று கிண்டலாக பதில் கூறினார். இந்த விவகாரம்தான் மூத்தகுடி மக்களை அதிர வைத்துள்ளது.

காமராஜரும், எம்.ஜி.ஆரும் செயல்படவே இல்லை என்பது போன்று உதயநிதி பேசியிருப்பதை வாபஸ் வாங்கவேண்டும் என்று கொந்தளிக்கின்றனர். உதயநிதி என்ன செய்யப் போகிறார்..?

Advertisement